2000 போலீசார் சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
நாளை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் சென்னை-கொல்கத்தா இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு சென்னை பெருநகர் காவல் ஆணையர் விசுவநாதன் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் எம்சி சாரங்கன், இணை ஆணையாளர்கள், 13 காவல் துணை ஆணையாளர்கள், 7 கூடுதல் துணை ஆணையாளர்கள், 29 உதவி ஆணையாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கமாண்டோ படையின் ஒரு அணியும், சென்னை காவல் ஆயுதப்படையைச் சேர்ந்த அதி தீவிர படையின் நான்கு குழுக்கழும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மைதானத்தின் உள்ளேயும் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் காவல் அதிகாரிகளைக் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர போக்குவரத்து வாகனங்கள் நெரிசலின்றி சீராக செல்ல, ரசிகர்கள் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் தலைமையில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும், சேப்பாக்கம் பெல்ஸ் சாலை வாலாஜாசாலை விக்டோரியா ஹாஸ்டல் ஆகியவை நாலை மாலை 6 மணிக்கு மூடப்படும் என்றும், சாலை மூடப்பட்டபின் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியை காணவரும் ரசிகர்கள் பலத்த சோதனைகளுக்குப் பிறகே மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…