IPL 2018: ஐ.பி.எல் போட்டிக்கு நீங்க கொண்டுட்டு வர்ற எல்லாத்துக்கும் தடை …!

Default Image
  1. சென்னையில்  ஐ.பி.எல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் : 

    ➤ பேனர்கள், கொடிகள், விளம்பரப் பட மற்றும் போட்டி ஸ்பான்சர்களுக்கு எதிரான படங்கள் ஆகியவற்றை மைதானத்தின் உள்ளே கொண்டு வர தடை.

    ➤ பைகள், கைப்பை, மொபைல் போன், பேஜர், ரேடியோ, லேப்டாப், கம்யூட்டர், டேப் ரெக்கார்டர், பைனாகுலர், ரிமோட் கண்ட்ரோல், ரிமோட் கண்ட்ரோல் கார் சாவி உள்ளிட்ட எலட்ரிக்கல் சாதனங்களும், இசைக்கருவிகளும், வீடியோ கேமரா, டிஜிட்டல் கேமரா உள்ளிட்டவை கொண்டு வர தடை.

    ➤ பட்டாசுகள், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள், தீயை உருவாக்கும் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஹார்வாட்டர் ஃபிளாஸ்க், தண்ணீர் பாட்டில், சிகரெட், பீடி, தீப்பெட்டி, லைட்டர்ஸ், கத்திரிகோல், கண்ணாடி, கண்ணாடி பாட்டில்கள், கத்தி, செல் பேட்டரி, சிறிய செல் பேட்டரி, செல்ல பிராணிகள் உள்ளிட்டவை மைதானத்தின் உள்ளே அனுமதிக்கப்படாது.

    ➤ மொபைல் போன், டிரான்சிஸ்டர், கேமரா, ரெக்கார்டிங் கருவிகளுக்கு தடை.

    ➤ வெளியே இருந்து மைதானத்திற்குள் கொண்டு வரப்படும் உணவுப் பொருட்களுக்கு தடை.

    ➤ போட்டியை காண்பதற்கான டிக்கெட்களை வைத்துள்ள ரசிகர்கள் அனைவரும் போலீசாரின் சோதனைகளுக்கு ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், வாகனங்களை அனுமதிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ➤ தேசியக் கொடியை அவமதிப்பதை ஏற்க முடியாது.

    ➤ எந்த பொருளையும் தூக்கி எறிய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பொருட்களை மைதானத்தில் தூக்கி வீசுவோர் போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவர்.

    ➤ சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் தோன்றும் நபர் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க ரசிகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    ➤ பிறர் முகம் சுழிக்கும் வகையில் நடந்துக் கொள்ளும், தகாத வார்த்தைகள் பேசும் நபர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவர்.

    ➤ மைதானத்தில் ஏற்படும் எவ்வித அசம்பாவிதத்திற்கும் பொறுப்பேற்க முடியாது.

    ➤ செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொண்டுவரும் நபர்கள் அவற்றை பாதுகாப்பு அதிகாரிகளிடமோ, போலீசாரிடமோ தர வேண்டாம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்