நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பின் ராவத்தின் வீரத்தை போற்றும் வண்ணம் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சைன் இந்தியாவின் சோல்ஜர் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் 120 கிலோ எடை கொண்ட பிபின் ராவதின் மார்பளவு சிலையை தயாரித்து அதை டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு.
கடந்த ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 12 ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இவர்களது மரணம் நாட்டையே உலுக்கிய நிலையில், குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் அன்ஜலி செலுத்தினர்.
இந்நிலையில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த பின் ராவத்தின் வீரத்தை போற்றும் வண்ணம் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் சைன் இந்தியாவின் சோல்ஜர் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பில் 120 கிலோ எடை கொண்ட பிபின் ராவதின் மார்பளவு சிலையை தயாரித்து அதை டெல்லியில் உள்ள ராணுவ போர் நினைவு சின்னத்தில் வைக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்படி கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வீதியில் உள்ள சிற்ப கூடத்தில் ஐம்பொன்னாலான சிலை தயார் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் முதல் கட்டமாக அவரது உருவம் தத்ரூபமாக களிமண்ணால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று, பின்,டெல்லி இந்தியா கேட் போர் நினைவுச் சின்னம் அருகில் பிரதமர் மோடியிடம் இந்த சிலையை அளிக்க உள்ளதாகவும் முன்னாள் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…