கடன் வாங்க வந்த மருத்துவருக்கு ஹிந்தி தெரியாததால், கடன் தர மறுத்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அரியலுார் மாவட்டம் யுத்தப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 77. இவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், தலைமை டாக்டராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவர், 15 ஆண்டுகளாக, தான் வாடிக்கையாளராக உள்ள கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் கேட்டு, சில நாட்களுக்கு முன் விண்ணப்பித்தார். வங்கியின் மூத்த மேலாளராக இருந்த, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால், ‘உங்களுக்கு ஹிந்தி தெரியாதா? எனக்கு தமிழ் தெரியாது. எனவே, கடன் தர இயலாது’ என கூறியதாக தெரிகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பாலசுப்ரமணியன், வங்கி மேலாளரிடம் விளக்கம் கேட்டு, 12ம் தேதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, விஷால், திருச்சி மண்டல அலுவலக சீனியர் மேனேஜராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…