வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு..!
வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. பரபரப்பான சூழலில் இந்த பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது
இந்த நிலையில், வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் பங்கேற்க ஈபிஎஸ் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பொதுக்குழுவில் கட்சியின் கணக்கு வழக்குகளை பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.