கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!
சென்னையில் வருகின்ற 6ஆம் தேதி நடைபெற இருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது.
சென்னை, சேப்பாக்கத்தில் இந்த விழாவானது திரைத்துறை சார்பில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் மற்றும் கமல் என தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவை கலந்து கொள்ளவதாக கூறப்படுகிறது.
அதன்படி, இந்த விழாவானது கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த இருந்தது. ஆனால், அப்போது மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணப் பணிகள் காரணமாக, (24.12.2023) அன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழாவானது நாளை மறுநாள் (06.01.2024) சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலி: ‘கலைஞர்100’ விழா ஒத்திவைப்பு…புதிய தேதி வெளியீடு.!
இந்நிலையில், சென்னையில் வருகின்ற 6ம் தேதி தமிழ் திரையுலகினர் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது, இயக்குனர் லிங்குசாமி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமநாராயணன், பொதுச் செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்டோர் அழைப்பிதழை வழங்கினர்.