திமுக இளைஞரணி மாநாடு… கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு!

dmk youth conferences

சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி திமுக இளைஞரணி 2வது மாநாடு நடைபெறும் என தலைமை கழகம் அறிவித்திருந்தது. கடந்த 2007, டிச. 15ல் திமுக இளைஞரணியின் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், தற்போது கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இளைஞரணியின் 2வது மாநாடு சேலத்தில் டிச.17ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், 2007ம் ஆண்டு டிச.15 அன்று கழக வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக.இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, வரும் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி மாநாட்டில் 10 லட்சம் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தை நோக்கி நகரும் மிக்ஜாம் புயல் – வானிலை ஆய்வு மையம்

திமுக இளைஞரணி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக இளைஞரணி தலைவராக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது தலைமையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. அதன்படி, இந்த மாநாடு குறித்த பிரச்சாரத்தை சமீபத்தில் கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.  இன்று கன்னியாகுமரியில் துவங்கியுள்ள பைக் பேரணியானது 234 தொகுதிகளுக்கும் 13 நாட்களில் சென்றையடையும் வண்ணம் அமைய உள்ளது.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக, மாநில உரிமைகளை மத்திய அரசிடமும் மீட்க வேண்டும் என்றும், திமுக செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேலத்தில் வரும் 17-ஆம் தேதி நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் காரணத்தால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இளைஞரணி மாநாட்டிற்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்த நிலையில், தற்போது கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விசுடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்