ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு… முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு!
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் நோக்கத்தில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணங்கள் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.
அந்தவகையில், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு வெளிநாடு பயணம் மேற்கொண்டார். அதன்படி, இந்தாண்டு தொடக்கத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மொத்தம் ரூ.6,64,180 கோடிக்கான 631 ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக கூறப்பட்டது. இதையடுத்து, தமிழகத்துக்கு மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டிற்கு 8 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
தொகுதிப் பங்கீடு: மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளோடு திமுக பேச்சுவார்த்தை..!
இந்த நிலையில், இன்று ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதன்படி, இந்த மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களைச் சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.