திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை.
மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது.
சில நாட்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.
அதேபோல் வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.அதுபோல் காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி மேற்கொண்டனர்.
மேலும் தனியார் சிமெண்ட் குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.அந்த சோதனையில் கட்டு கட்டாக மூட்டைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர் .பின்னர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது.அதேபோல் சிமெண்ட் குடோனில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ. 11.53 கோடி என தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் துரைமுருகன் வீட்டில் சோதனை செய்தது பற்றி தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை அளித்தது வருமான வரித்துறை.வருமான வரித்துறையினரின் அறிக்கையை ஆய்வு செய்தபின் தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் பற்றிய விவரங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…