தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் – அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு.
இன்று இரண்டாவது நாள் நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், வேளாண் மற்றும் உழவர்த்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டை தாக்கல் உரையின்போது, தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் வசதிக்காக தமிழில் வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்வி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
கோவை மாவட்டம் வேளாண் பல்கலைக்கழகத்தில், தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலை கல்வி அறிமுகம் செய்யப்படும் என்றும் கிருஷ்ணகிரியில் ஜீனூரில் 150 ஏக்கரில் தோட்டக்கலை கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதற்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், திருச்சி மற்றும் நாகை மாவட்டத்திற்கு இடையேயான பகுதி வேளாண் தொழிற்சாலைகளுக்கான பெருந்தடமாக (Agro Industrial Corridor) அறிவிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.