23 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம்..!
தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம்
தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கூட்டுறவு வங்கிகள் மற்றும் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்.
மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக NEFT, RTGS உள்ளிட்ட வசதிகளையும் பெறலாம். கூட்டுறவு வங்கிகளை தொடர்ந்து யுபிஐ வசதி தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.