தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் வாங்கும் திட்டம் அறிமுகம்-அமைச்சர் காமராஜ் தகவல்
தமிழ்நாட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் பேசுகையில், ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் இணைத்து விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார்.
மேலும் தமிழ்நாட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.இந்த திட்டத்தை முதலமைச்சர் வெளிநாடு பயணத்தை முடித்த வந்த பின்பு தொடங்கி வைக்க உள்ளார்.ஒரே ரேசன் திட்டத்தால் தமிழக பொது வினியோக திட்டத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.