மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கேபிள் வழியாக ஆடியோ வீடியோ உடன் ஒளிபரப்பப்படும் சிறப்பு நூலக திட்டத்தையும் சிறைத்துறை தொடங்கியுள்ளது.
தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூசாரி தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். கைதிகளின் நலனுக்காக ஏற்கனவே கைதிகளை காண வருபவர்களுக்கு நவீன நேர்காணல் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி உள்ளார்.
அதேபோல் தற்போது சிறை கைதிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சிலை நூலக திட்டத்தினை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் ஒரு லட்சம் புத்தகங்களை நன்கொடையாக பெறுவது என இலக்கு வைத்து செயல்பட்டு வருகிறார்.
இதுவரை தமிழக சிறைகளுக்கு 12 ஆயிரம் புத்தகங்கள் வரையில் சேகரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் கூட பலர் சிறை கைதிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். திமுக எம்பி கனிமொழி, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பல்வேறு புத்தகங்களை சிறை கைதிகளுக்கு நன்கொடையாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தற்போது தமிழகத்தில் முதல்முறையாக மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு கேபிள் வழியாக ஆடியோ வீடியோ உடன் ஒளிபரப்பப்படும் சிறப்பு நூலக திட்டத்தையும் சிறைத்துறை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு புத்தகங்களையும், கதைகளை முழுமையாக ஒலி ஒலி வடிவில் காட்சிகளாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…