TVKParty: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதில், முதல் உறுப்பினராக கட்சியின் தலைவர் விஜய் இணைந்துள்ளார். அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், முதல் முறையாக வீடியோ மூலம், உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில், நான் முதல் ஆளாக இணைந்து விட்டேன், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, வருகின்ற சட்டமன்ற தேர்தலை நோக்கி என்னுடைய பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய, கட்சியின் உறுதி மொழியை படிங்க.. உங்களுக்கு பிடிச்சிருந்தா சேருங்க என்று பேசியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக வெளியான அறிக்கையில், மகளிர் அனைவருக்கும் எனது அன்பான மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் பெற்றுக்கொண்டது குறித்துப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து, மக்கள் பணி செய்ய விரும்பினால், நமது கட்சியின் உறுதிமொழியைப் படித்துவிட்டு, கீழே உள்ள உறுப்பினர் சேர்க்கை QR-Code இணைப்புகளைப் பயன்படுத்தி, மிகவும் சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம். தோழர்களாக இணைந்து, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சரித்திரம் படைப்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைவர் விஜய்யின் அறிவுரைபடி, 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளார். அதன்படி, மே மாதத்திற்குள் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும். உறுப்பினர் சேர்க்கைக்கு மகளிர் தலைமையில் தனி அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…