தமிழக சுகாதாரத்துறை கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி பெற ட்விட்டர் கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால், பல மருத்துவமனைகளில் படுக்கை வசதியுடன் கூடிய ஆக்சிஜன் இடம் இல்லாததால் பல நோயாளிகள் படுக்கை வசதியுடன் ஆக்சிஜன் எங்கு கிடைக்கும் என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி பெற ட்விட்டர் கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. @1O4GoTN என்ற ட்விட்டர் கணக்கு மூலம் படுக்கை வசதியை கோரலாம். கொரோனா நோயாளிகளின் கோரிக்கை கையாள ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் படுக்கை மேலாண்மையை இணையம் வழியாக கட்டளை மையம் கண்காணித்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கட்டளை மையம் படுக்கை வசதியுடன் ஆக்சிஜன் கிடைப்பதையும் உறுதிசெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் வசதியை பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…