மிரட்டல் பாணி தீர்வைத் தராது! தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஏற்புடையதல்ல – மநீம
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் ரேஷன் கடை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தமிழக அரசு முன்வர வேண்டும்.
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில் ரேஷன் கடை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அந்த பதிவில், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் ரேஷன் கடை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தமிழக அரசு முன்வர வேண்டும். மிரட்டல் பாணி தீர்வைத் தராது!’ என பதிவிட்டுள்ளனர்.