திமுகவினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுவது கண்டிக்கத்தக்கது – ஓபிஎஸ்

Default Image

சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் உட்பட அனைவர்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சென்னை மாநகரரட்சி அதிகாரிகளை தாக்கிய திருவொற்றியூர் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களின் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று தாங்கள் சொல்லும் நபர்களை களப் பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று திமுகவினர் அதிகாரிகளை மிரட்டியது, தடுப்பூசி முகாம்களிலும், நியாய விலைக் கடைகளில் டோக்கன் விநியோகிப்பதிலும், திமுகவினரின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது, திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்திய லாரிகளை பறிமுதல் செய்த காவல் துறையினரை மிரட்டியது, புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே கீழத்தானியம் பகுதியில் மணல் கடத்தி வந்த லாரியை பிடிக்க முயற்சித்த கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோரை கொல்ல முயற்சித்தது என்ற வரிசையில் தற்போது சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் மற்றும் அவரது உதவியாளர் திருவெற்றியூர் திமுக எம்எல்ஏ சங்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்.

எனவே, திமுகவினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுவது கண்டிக்கத்தக்கது. அரசுப்பணிகளில் கட்சியினர் தலையீடு கூடாது எனும் அண்ணாவின் கூற்றிற்கு முற்றிலும் முரணான சட்டவிரோத ஆட்சியே இது. சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தாக்கிய சட்டமன்ற உறுப்பினர் உட்பட அனைவர்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்