கொரோனா பரவல் குறித்த தேவையற்ற அச்சம் வேண்டாம்-சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களை பார்க்க மருத்துவமனைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொருத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.கோயம்பேடு ,மார்க்கெட்டை மையமாக கொண்டு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கு கொரோனா பரவி வருகிறது.எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை கொரோனா சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து அவர் கள ஆய்வு மேற்கொண்டு அதன் நிலவரங்களை ஊடகங்களுக்கு விளக்கி வருகிறார்.
அந்த வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்.அப்பொழுது அவர் கூறுகையில்,கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு சென்னை மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனோ குறித்து மக்கள் அச்சப்படத்தேவையில்லை. நோய் குறித்து பயம் கொள்ளாமல் கை கழுவுதல், முகக்கவசம் போன்ற வாழ்வு முறைகளை மாற்றிக்கொள்ளவேண்டும் .கோரோனோவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களை ஒதுக்கப்பட்டவர்களாக கருதக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களில் 99% குணமாகி வருகின்றனர் .
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களை பார்க்க மருத்துவமனைக்கு யாரும் செல்ல வேண்டாம்.அறிகுறி இல்லாதவர்கள் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படியே வேறு இடத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள் .கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.