21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல்!!
- 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளிக்கப்பட்டது.
- 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.அதேபோல் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.இதனால் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளிக்கப்பட்டது.மேலும் விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டிஆர் பாலு ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகிறது.