சர்வதேச மகளிர் தினம்; கமல்ஹாசன் வாழ்த்து.!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச்-8) சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. உலகில் அனைத்து பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில், ஊக்குவிக்கும் வகையில், தன்னம்பிக்கை வளர்க்கும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
நடிகரும் மக்கள் நீதிமயம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மகளிர் தினத்தை முன்னிட்டு தனது ட்வீட்டில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், பெண்கள் இல்லாத துறை இல்லை என்றும், சாதிக்காத துறை இல்லை என்றும், இந்த நவயுகத்தில் உயர்ந்து நிற்கும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்து என பதிவிட்டுள்ளார்.
பெண்கள் தொடாத துறையே இல்லை; தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்துகொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்து.
— Kamal Haasan (@ikamalhaasan) March 8, 2023