சர்வதேச தாய்மொழி தினம்; தமிழ்மொழி குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட்.!
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது ட்வீட்டில், தமிழ்மொழி குறித்து பெருமிதம்.
இன்று பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தாய்மொழி தினத்தை சிறப்பிக்கும் பொருட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின், தாய்மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம்,உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம் என்று பெருமிதமாக கூறியுள்ளார்.
மேலும் பழமையான நம் தமிழ் மொழி காலத்துக்கேற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ளும் தன்மையுடைய மொழி எனவும், அத்தகைய தமிழ் மொழியைக் காப்போம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் – உயிர்!
உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்!தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழைக் காப்போம்! தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம்!#InternationalMotherLanguageDay
— M.K.Stalin (@mkstalin) February 21, 2023