“மா.திறனாளிகளின் நலனுக்காக அம்மா செய்த காரியம்;நினைவுகூர்வதில் பெருமகிழ்ச்சி ” – ஓபிஎஸ் வாழ்த்து!

Default Image

சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் உயர உதவிபுரிவோம் என உறுதியேற்க வேண்டும் என்று ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகள் என்றும்,தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கிய அரசு அதிமுக அரசு என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும்,மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்விற்காக தனி இயக்கத்தையே தொடங்கியவர் மாண்புமிகு அம்மா என்பதை நினைவுகூர்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மாற்றுத் திறனாளிகள் உரிமைகளையும் பெறும் வகையில் சகல அவர்களுக்கு அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அளித்திடல் வேண்டும், சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் அவர்களுக்கு உதவிடுதல் வேண்டும் என்ற நோக்கத்திற்காக சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.

மாற்றுத் திறனாளிகளின் நலனில் அதிக அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்விற்காக தனி இயக்ககத்தையே 1992 ஆம் ஆண்டு தொடங்கியவர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்த இயக்ககத்தின் மூலம் பல்வேறு சலுகைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கிய அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு.

பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மாற்றுத் திறனாளிகள் உயர்ந்து வாழ உதவி புரிவோம் என சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான இன்று நாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்போம்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்