சர்வதேச புத்தக கண்காட்சி – நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு..!
சர்வதேச புத்தக கண்காட்சிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில், நந்தனத்தில் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியானது ஜனவரி 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனை அடுத்து தமிழக அரசு இந்த புத்தக கண்காட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த கண்காட்சிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.