2024 ஜனவரி 16 முதல் பன்னாட்டு புத்தகக் காட்சி – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
சென்னை சர்வதேச புத்தகக் காட்சி ஜனவரி 16 முதல் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது என அறிவிப்பு.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழகத்தில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி நடைபெறும் என அறிவித்தார். ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஜூன் 3ம் தேதி நடைபெற இருந்த இந்நிகழ்ச்சி தாமதமாக நடைபெறுகிறது.
அதன்படி, சென்னை நந்தபாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச பன்னாட்டு பு புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. 2024 சென்னை பன்னாட்டு புத்தக காட்சியில் சிறப்பு விருந்தினர் நாடாக மலேசியா கவுரவிக்கப்டுகிறது. சிறந்த நூல்களை பொழிபெயர்ப்பு செய்வதற்கு ரூ.3 கோடி மானியமாக வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.