உள் ஒதுக்கீடு தீர்ப்பு திமுகவின் சமூகநீதிக் கொள்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி – மு.க. ஸ்டாலின்
உள் ஒதுக்கீடு தீர்ப்பு திமுகவின் சமூகநீதிக் கொள்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருந்ததியர் சமுதாயத்திற்கு 3% உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசனச் சட்ட அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.
- தி.மு.க., வின் சமூக நீதிக் கொள்கைக்கும், முத்தமிழறிஞர் கலைஞரின் முடிவுக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி இது.
- ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமூகநீதி சிந்தனையுடன் செயல்படும் பேரியக்கம். 7.6.1971 அன்று பட்டியலின- பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 18% உயர்த்தியவர் கலைஞர்.
- 22.6.1990 அன்று 18% இட ஒதுக்கீடு பட்டியல் இனத்திற்கு தனியாக 1% பழங்குடியின மக்களுக்கு என 19% ஆக உயர்த்தியது முத்தமிழறிஞர் தான்.
- பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட (BC, MBC இட ஒதுக்கீட்டையும் சேர்த்து- 69% இட ஒதுக்கீடுடன் தனித்துவம் பெற்று நிற்கிறது தமிழகம்.
- 23.1.2008 அன்று சமூக பொருளாதாரத்தில் அடித்தளத்தில் அருந்ததியர் இருப்பதால் அவர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது’ என அறிவித்தது கலைஞர் அரசு.
- 27.11.2008 அன்று அருந்ததியினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 3% இட ஒதுக்கீடு வழங்கி அமைச்சரவை தீர்மானம் இயற்றியது தி.மு.க அரசு.
- சட்ட முன்வடிவுக்கான கலைஞரின் உரையை உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற முறையில் நான் அவையில் எடுத்துரைத்தேன்.
- 29.4.2009 அன்று இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டது இன்றுவரை அருந்ததியர் சமுதாயத்தினரின் முன்னேற்றத்தில் அந்த உள் ஒதுக்கீடு ஒரு வரப்பிரசாதம்.
- அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதியை நிலைநாட்டியுள்ள மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு தி.மு.க சார்பில் நன்றி.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
SC -18%, ST – தனியாக 1% என பட்டியலின-பழங்குடியினர் இடஒதுக்கீட்டை 19% ஆக உயர்த்தியது தி.மு.க;
அருந்ததியினர் சமூகத்திற்கு 3% உள் இடஒதுக்கீடு தந்ததும் கலைஞர் அரசு.
இன்று உச்சநீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. கலைஞரின் முடிவுக்கான வெற்றி இது.
அக மகிழ்வோடு வரவேற்கிறேன்! pic.twitter.com/dvvGZbYF6B
— M.K.Stalin (@mkstalin) August 27, 2020