ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தும் அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Default Image

பொது போக்குவரத்து வாகனங்களில் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தும் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக்த்தில் குறிப்பிட்ட 8 நிறுவனங்கள் தயாரிக்கும் ஜிபிஎஸ் கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சகம் அண்மையில் உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னையில் உள்ள ஸ்மார்ட் மொபிலிட்டி அசோசியேஷன் என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில் ஏத்தனையோ ஜிபிஎஸ் நிறுவனங்கள் இருந்தும், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஹரியானாவை சேர்ந்த அந்த குறிப்பிட்ட 8 நிறுவனங்களின் கருவியை மட்டும்தான் பொறுத்தவேண்டும் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது மட்டும்தான் பொருத்தவேண்டும் என்பது சட்ட விரோதமானது இதனால் அந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கு குறித்து விளக்கமளித்த தமிழக அரசு, கால அவகாசம் கேட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 18-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு, 8 நிறுவனங்களின் கருவிகளை மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவிற்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்