அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத்தடை – உயர்நீதிமன்றம்
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்?
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கல்லூரி மாணவர்களின் அறியார் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சில பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பல்கலைக்கழகங்கள் வெளியிட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.