ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை!

edappadi palaniswami

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கடந்த ஆண்டு அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்பின்  கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்ட்ரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கை மீண்டும் விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டது.

அதிமுக பொதுக்குழு வழக்கு… ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிப்பு..!

தனக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதாவது, அவதூறு வழக்கிற்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதேசமயத்தில், தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என கூறி கே.சி.பழனிச்சாமி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இபிஎஸ் தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
durai murugan periyar
donald trump joe biden
pawan kalyan roja
erode by election 2025
periyar seeman
R Ashwin speech about Hindi