முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ.பி.எஸ். இழந்துவிட்டார் என ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த 23-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், ஈபிஎஸ் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அதிமுக பொதுக்குழு உட்கட்சி செயல்பாடு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு இருப்பது சட்டத்திற்கும், இயல்பறிவுக்கும் எதிரானது. தனது ஒப்புதல் இல்லாமல் தலைமை குறித்த விவாதத்தை நடத்த முடியாது என ஓபிஎஸ் தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. ஓ.பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் அதிமுகவின் அடிப்படை கோட்பாடுகளுக்கு எதிராகவும், கட்சியின் சட்டவிதிகளுக்கு புறம்பாகவும் உள்ளது.
பொதுக்குழுவில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சித் தலைமை என்பது ஒற்றைத்தலைமையாக இருக்க வேண்டும் எனவும், மனுதாரர் எடப்பாடி பழனிச்சாமியை தலைவராக்க வேண்டும் என்று ஒரே குரலாக பேசினர். முதன்மை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் நம்பிக்கையை ஓ.பி.எஸ். இழந்துவிட்டார்; கட்சியில் முடிவெடுக்கும் உரிமை பொதுக்குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது, ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவு அதனை முடக்குவது போல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது…