வாக்குப்பெட்டியை பாதுகாக்கும் ஸ்ட்ராங் ரூம்… சுவாரஸ்ய தகவல்கள்…

strong room

Election2024: மக்களவை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது.

மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை மணி வரை நடைபெற்று நிறைவு பெற்றது. வாக்குச்சாவடிக்கு 6 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.

தமிழகத்தில் 39 தொகுதிகளில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.48% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னையில் 54.27% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ஸ்ட்ராங் ரூம் எனும் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனால் ஸ்ட்ராங் ரூமில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த ஸ்ட்ராங் ரூம் எனும் கட்டுப்பாட்டு அறை குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது, வாக்குப்பதிவுக்குப் பிறகு மின்னணு வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் இந்த கட்டுப்பாட்டு அறையில் தான் வாக்குப்பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு மக்களவை தொகுதிகளிலும் ஒரு ஸ்ட்ராங் ரூம் அமைக்கப்பட்டு, வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் வரை பாதுகாப்பாக வைக்கப்படும்.

இந்த ஸ்ட்ராங் ரூமை பொறுத்தவரையில் ஒரு கதவு, இரண்டு பூட்டு சாவிகள் இருக்கும். அதில் ஒரு சாவி தேர்தல் நடத்தும் (RO) அதிகாரியிடமும், மற்றொரு சாவி மாவட்ட அளவிலான தேர்தல் அதிகாரியிடமும் இருக்கும். மேலும், கட்டுப்பாட்டு அறையை பொறுத்தவரை மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலமாக ஸ்ட்ராங் ரூம் கண்காணிக்கப்படும்.

ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பாக உள்ளதா? என்பதை பார்க்க வேட்பாளர்கள், முகவர்கள் விரும்பினால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பார்க்க அனுமதி அளிக்கப்படும். இதில் குறிப்பாக வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்க வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே வாக்கு எண்ணும் மையம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அப்படி இல்லையென்றால் வாக்கு பெட்டியை எடுத்து செல்ல தனி வழி ஏற்பாடு மற்றும் ஆயுத ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட்டு எடுத்து செல்லப்படும். எனவே, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி வரை 45 நாட்களும் ஸ்ட்ராங் ரூமில் இந்த பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
Anant Ambani Chicken
Kachchatheevu - MKStalin
K. C. Venugopal
Kachchatheevu - BJP
a RASA - Sekar Babu
krishnamachari srikkanth ravichandran ashwin