மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
சென்னை கிண்டியில் தூர்தர்ஷன் வழங்கும் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட தொழில், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள், மத்திய அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.
கட்டமைப்புகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியானது ரூ.5.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.7.5 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதில் ரூ.1 லட்சம் கோடி வட்டியில்லா கடனாக கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். சோசலிச திட்டத்தின் மூலம் நம்முடைய நாட்டிலேயே அரசு முதலீட்டில் உற்பத்தி கடந்த 60 ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்தது. ஆனால் அது முறையாக தொடரப்படவில்லை. சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டன என்றும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கோதாவரி -பெண்ணாறு-காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு பட்ஜெட்டில் இறுதி செய்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மத்திய பட்ஜெட் மீதான விளக்கக் கூட்டத்தில் தெரிவித்தார்.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…