தீவிரமடையும் நிவர் : புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல்கூண்டு!
தீவிரமடையும் நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல்கூண்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிவர் புயல் எச்சரிக்கை தமிழகம் முழுவதிலுமுள்ள கடலோர பகுதிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்துள்ளனர். இன்று இந்த புயல் காரைக்கால் துறைமுகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 10 மணி நேரங்களில் புயல் தீவிரமடையவுள்ளதால் 155 கிமீ வேகத்திற்கு காற்று அடிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் கடலூர் ஆகிய துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றிரவு புதுச்சேரியில் நிவர் புயல் கரையை கடக்கும் என கூறப்படுகிறது.