ரயில்வே கொரோனா வார்டுகளுக்கு ஒப்பந்த மருத்துவ ஊழியர்கள் தேவை.! உடனே விண்ணப்பிக்கவும்…

Default Image

சென்னை ஐ.சி.எஃப்இல் (ICF -Integral coach Factory) கொரோனா வார்டில் பணியாற்ற  ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

ரயில்வேயில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா வார்டில் பணியாற்ற ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த ஒப்பந்தமானது குறைந்தது 3 மாதம் முதல் கொரோனா நடவடிக்கை நடைபெறும் காலம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பணியில், நர்சிங் மேற்பார்வையாளருக்கு 24  பணியிடங்களும், ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டென்ட் பணியாளர்களுக்கு 24 காலிப்பணியிடங்களும், மருத்துவர் பணிக்கு 12 காலிப்பணியிடங்களும், Physician மருத்துவ பணிக்கு 2  காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

நர்சிங் மேற்பார்வையாளருக்கு  44,900 ரூபாய் மாத சம்பளமாகவும், ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டென்ட் பணியாளர்களுக்கு 18,000 ரூபாய் மாத சம்பளமாகவும், மருத்துவர் பணியாளர்களுக்கு 75,000 ரூபாய் மாத சம்பளமாகவும், Physician மருத்துவர்களுக்கு 95,000 ரூபாய் மாத சம்பளமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மருத்துவர் மற்றும் Physician மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 53 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும், நர்சிங் மேற்பார்வையாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது முதல் 40 வரை இருக்கலாம். ஹவுஸ் கீப்பிங் அசிஸ்டென்ட் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 33 வயது வரை இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விபரங்களு ஐ.சி.எஃப் சென்னை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ICF லிங்க்கில் பி.டி.எஃப் ஃபைலாக கொடுக்கப்பட்டுள்ளது.   

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்