கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாணடிகுப்பத்தில் நடைபெற்ற கபடி போட்டியின் போது கபடி வீரர் விமல்ராஜ் என்பவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து உயிர் இழந்தார்.
இவரது மரணம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கிய நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்தை சந்தித்து, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியான 2 லட்சத்தையும் அவர்களுக்கு வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், விளையாட்டுத்துறை அமைச்சர் என்கிற முறையில் விமல்ராஜ் உயிரிழப்பு ஏற்கமுடியவில்லை என்றும், விளையாட்டு மைதானத்தில் உயிரிழந்த கபடி வீரர் வீடியோவை பலகோடி பேர் பார்த்து மனவேதனை அடைந்ததாகவும், நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்கு தேவையானதை செய்ய என கூறியுள்ளார்.
மேலும், இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது எனது தெரிவித்துள்ளார்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…