விரைவில் கறவை மாடுகளுக்காக காப்பீட்டுத் திட்டம் – அமைச்சர் மனோ தங்கராஜ்
கறவை மாடுகளுக்காக காப்பீட்டுத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்.
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருதியும், பால் உற்பத்தியை பெருக்கவும் கறவை மாடுகளுக்காக காப்பீட்டுத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், அனுமதி பெறாத பால் குளிரூட்டு நிலையங்கள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.