தேசிய கொடி அவமதிப்பு.? பணிமாற்றம் செய்யப்பட்ட சென்னை காவல்துறை எஸ்.ஐ.!

Indian National Flag

நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உலககோப்பை லீக் தொடர் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி  தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தை காண, நாடு வேறுபாடுகளை கடந்து இரு அணிகளுக்கும் ஆதரவாக சேப்பாக்கத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கொடிகளை தாண்டி, இஸ்ரேல் பாலஸ்தீன கொடிகளும் கொண்டு வரப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஆம்னி பேருந்து வேலைநிறுத்தம் வாபஸ்..! அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும்..!

இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதலில் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். உலகக்கோப்பை போட்டியில் இந்த விவகாரம் தொடர்பாக கோஷம் எழுப்ப கூடும் என்பதால் , காவல்துறையினர் ரசிகர்களிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த சமயம் நமது நாட்டு மூவர்ண கொடிக்கும் அனுமதியில்லை என கூறப்படுகிறது. இதனால் செம்பியம் பகுதி எஸ்ஐ நாகராஜன் ரசிகர்களிடம் மூவர்ண கொடிகளை பறிமுதல் செய்து அதனை முதலில் குப்பை தொட்டியில் போட முற்பட்டார். இதற்கு பலர் ஆட்சேபனை தெரிவித்தவுடன் அதனை வாகனத்தில் வைத்துக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதை தொடர்ந்து, எஸ்ஐ நாகராஜன் செம்பியம் காவல் நிலையத்தில் இருந்து மாற்றப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியமர்த்தப்பட்டார். இந்த உத்தரவை சென்னை கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu