மின் விபத்துகள் மற்றும் கள பணியாளர்கள் உயிரிழப்பு அதிகளவில் ஏறபடுவதால் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி உயிரிழப்பு நிகழா வண்ணம் பணிபுரிய அறிவுறுத்தல்.
மின் பகிர்மான கழக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக மின் விபத்துக்கள் அதிகம் நடைபெறுவதாக தெரியவருகிறது. இதனால் கள பிரிவுகளில் பணிபுரியும் கள பணியாளர்கள் உயிரிழப்பு மற்றும் உடல் நல பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. நிறுவனம் சாரா மின் நுகர்வோர்களும் உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்காததால் மின் விபத்து, உயிரிழப்பு முதல் தீவிர உடல் பாதிப்பு அதிகளவில் நடைபெறுகிறது.
எனவே, இனி வரும் காலங்களில் மிக கவனத்துடனும், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி மின் விபத்துக்கள் நிகழாவண்ணமும் கள பணியாளர்கள் மற்றும் வாரியத்திற்கு எவ்வித பாதிப்பும் இன்றி வாரிய பணி மேலும் சிறப்பாக நடைபெற தங்கள் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றும்மாறு அறிவுறுத்தி, மேலும் இதுகுறித்து பொது மக்கள் கவனத்திற்கு மின் உபகரணங்கள் மற்றும் மின்சாரம் பயன்பாடு பாதுகாப்பாக கையாள்வது குறித்து கையேடுகள், ஊடக அளவில் விளம்பரம், பொது இடங்களில் பாதுகாப்பு விளம்பர அறிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தலைமை பொறியாளர் / மேற்பார்வை பொறியாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்படுகிறது.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…