தனது இன்ஸ்டாகிராம் காதலனுக்காக மதுரையை சேர்ந்த 16வயது சிறுமி வீட்டில் இருந்த 60 பவுன் நகைகளை திருடி கொடுத்துள்ளர்.
தற்போது இணையதள மோகம் என்பது வயது வித்தியாசம் பாராமல் அதிகரித்து விட்டது. முதலில் இளைஞர்கள் தான் அதிகம் ஸ்மார்ட் போன் உபயோகிக்கின்றனர் என கூறி வந்தனர். ஆனால் இப்பொது அப்படி கூற முடியாது.
அதனால் பல நேரங்களில் வயது வித்தியாசம் இல்லாமல் சில தவறுகள் நடந்துவிடுகிறது. அப்படி தான் தற்போது மதுரையில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரையை சேர்ந்த ஓர் 16 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் ஒரு 22 வயது வயது இளைஞருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கத்தின் அடிப்படையில் அடிக்கடி அந்த சிறுமியிடம் இந்த இளைஞன் நகை கேட்டுள்ளான்,
இந்த சிறுமியும் வீட்டில் இருந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் யாருக்கும் தெரியாமல் திருடி, அந்த இளைஞனுக்கு கொடுத்துள்ளார். திடீரென வீட்டு பீரோவை பார்த்த குடும்பத்தார்க்கு அதிர்ச்சி. போலீசில் புகார் கொடுத்து பின்னர் விசாரிக்கையில், இந்த சிறுமி தான் தன்னுடைய காதலனுக்காக வீட்டில் இருந்த 60 பவுன் நகையை கொஞ்சம் கொஞ்சமாக திருடியது தெரியவந்துள்ளது. இந்த நகையை விற்று அந்த இளைஞன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளான்.
விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக அதிகனமழை கொட்டித் தீர்த்ததால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்…
சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சாத்தனூர் அணை நீர்வரத்து அதிகரிக்கும். இதனால், அணையிலிருந்து நீரை வெளியேற்றலாம் என 29ம் தேதியே…
பாட்னா : ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மத்திய நிதியமைச்சகம் சார்பில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும். அப்போது மாநிலங்கள்…
சென்னை :சளி, இருமல், காய்ச்சல் ,உடல் சோர்வு போன்றவற்றை நீக்க நண்டு ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி…
டெல்லி : iQOO நிறுவனமானது ஒரு வழியாக iQOO 13 ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் எப்போது…
திருவண்ணாமலை : வரலாறு காணாத மழையால் திருவண்ணாமலையில் அடுத்தடுத்த இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருவதால், பரபரப்பான சூழல் நிலவியது. குறிப்பாக,…