சர்ச்சையான வீடியோ பதிவிட்டு தலைமறைவாக இருந்த இன்ஸ்டா தமன்னாவை தனிப்படை காவல் துறையினர் கோவை சங்ககிரியில் கைது செய்தனர்.
கோவை, கீரநத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவர் அண்மையில் கோவை நீதிமன்றத்தின் அருகே கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவமானது, கடந்த 2021 ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் என்பவரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோகுல் இருந்தார் எனவும் அதற்கு பலி வாங்கல் சம்பவமாக இந்த கொலை சம்பவம் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. .
கஞ்சா வழக்கு :
இதனால், குரங்கு ஸ்ரீராம் நண்பர்களை தனிப்படையினர் தேடி வந்தனர். அப்போது,
ரத்தினபுரியை சேர்ந்த வினோதினி எனும் தமன்னா என்பவரின் இன்ஸ்ட்டா வீடியோ சிக்கியது. இவர் ஏற்கனவே பீளமேடு பகுதியில் கஞ்சா விற்றதாக கூறி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர்.
சர்ச்சை ரீல்ஸ் :
கோகுல் – குரங்கு ஸ்ரீராம் என இரு கும்பல்களுக்கும் பிரச்சனை ஏற்பட இருவரும் காரணம் என கூறப்படுகிறது. மேலும், இவர் பதிவிட்ட ரீலிஸில் ஆயுதங்கள் வைத்து இருபப்து, புகை பிடிப்பது என ஒரு ரவுடி கும்பலுக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்டு இருந்ததால் தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேட ஆரம்பித்தனர்.
தமன்னா வீடியோ :
தன்னை போலீஸ் தேடுவது பற்றி அறிந்த வினோதினி எனும் இன்ஸ்டா தமன்னா, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தான் 2 ஆண்டுக்கு முன்பு பதிவிட்ட வீடியோ தற்போது வைரலாகிறது என்றும், தன்னை கஞ்சா வழக்கில் கைது செய்து, பின்னர் சிறைக்கு சென்று வந்த பின்னர் வேறு மாதிரியான வீடியோ போடுவதில்லை என்றும், தற்போது திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும், 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும். ப்ளீஸ் என்னை தேடாதீர்கள் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
தனிப்படை கைது :
இதனை தொடர்ந்து, சங்ககிரியில் பதுங்கி இருந்த இன்ஸ்டா தமன்னாவை காவல்துறையினர் கைது செய்தனர். ஆயுத பிரிவு சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவு பதியப்பட்டுள்ளது நேற்று காலை சங்ககிரியில் கைது செய்து பீளமேடு காவல் நிலையத்தில் விசாரித்து, பின்னர் கைது செய்தனர். அவர் கர்ப்பிணியாக இருப்பதால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…
நியூசிலாந்து : உலகத்தில் உள்ள அணைத்து மக்களுக்கும் ஆங்கில புத்தாண்டை கொண்டாட தயாராகி உள்ளனர். நம்மூரில் இன்று இரவு 12 மணிக்கு…