தியாகராஜர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 2-வது நாளாக ஆய்வு…!!
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரின் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் துறை சார்பில் தமிழக கோயில்களில் உள்ள சிலைகளின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவாரூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 625 கோயில்களுக்கு சொந்தமான 4 ஆயிரத்து 359 சிலைகள் இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 2-வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.