#BREAKING: ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதி.!
சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதி.
சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உட்பட 5 பேரை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த்தும்போது ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு முதுகு பின்தண்டுவடத்தில் வலி இருப்பதாகவும், அதனால் தன்னை மருத்துவமனையில் சிகிக்சை பெற அனுமதிக்கவேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டார். இதைத்தொடர்ந்து, நீதிபதி சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தினார்.
இந்நிலையில், நேற்று இரவு ஆய்வாளர் ஸ்ரீதருக்கு முதுகு பின்தண்டுவடத்தில் வலி அதிகமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மதுரை மத்திய சிறையில் இருந்து ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை ராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகிறது.
ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் சிகிக்சை பெறுவாரா..? அல்லது சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சை பெறுவாரா..? என்பது மருத்துவர்கள் அளிக்கும் முடிவில் உள்ளது. மேலும், சிபிஐ அதிகாரிகள் இரண்டு பேருக்கு கொரோனா உறுதியானதால் சிபிஐ விசாரணை நடத்திய கைது செய்யப்பட்ட போலீசாரிடம் மீண்டும் பரிசோதனை செய்யவுள்ளனர்.