ரவீந்திரநாத் குமாரை எம்.பி என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்தவர் கைது
ரவீந்திரநாத் கல்வெட்டு விவகாரத்தில் முன்னாள் காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
தேனியில் குச்சனூர் கோயில் கல்வெட்டு ஒன்றில் அதிமுக சார்பில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாரின் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் என்று இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்குமார் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் ரவீந்திரநாத் பெயர் பொறித்த கல்வெட்டு விவாகரம் தொடர்பாக குச்சனூர் கோயில் நிர்வாகியும், முன்னாள் காவலருமான வேல்முருகன் மீது 3 பிரிவுகளின் கீழ் சின்னமனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணியினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ரவீந்திரநாத் கல்வெட்டு விவகாரத்தில் முன்னாள் காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார் .கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் காவலர் வேல்முருகன் சின்னமனூர் அருகே ஒடைப்பட்டியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.