விபத்தில் காயமடைந்து கோமாவில் இருந்தவருக்கு 24 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!
கோவை சிறுமுகையில் இருந்து பார்த்திபன் என்பவர் தனது அம்மாவை ( விஜயலக்ஷ்மி) இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பவானிசாகர் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்போது ஊட்டியில் இருந்து சிந்தேகுண்டே என்பவர் காரில் வந்துள்ளார். அப்போது தொட்டிபாளையம் எனும் இடத்தில் சென்று கொண்டிருக்கையில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்து 2016 ஜனவரியில் நடைபெற்றது. இதில் பலத்த காயமடைந்த விஜயலட்சுமி கோமாவில் இருந்தார். இந்த விபத்து குறித்து நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் விசாரணை நடத்தியது. இது குறித்து சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தனக்கு கோமாவில் இருந்ததற்காக இழப்பீடு வழங்க வேண்டுமென புகார் அளித்தார்.
இது குறித்து விசாரித்த நீதிபதி இருவரிடம் சமரசம் பேசி நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, ஓய்வு பெற்ற நீதிபதி ராமராஜன் ஆகியோர் பாதிக்கப்பட்ட விஜயலக்ஷ்மிக்கு 24 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு நகலை விஜயலக்ஷ்மியிடம் கொடுத்தனர். இதனை வாங்க விஜய லட்சுமி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்திற்கு சென்று வாங்கியுள்ளார்.