அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா கடந்த 2018-ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டது.
சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டை கலையரசன் தலைமையில் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
துணைவேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள், ஊழியர்கள், புகார்தாரர்கள் என்று அனைவரிடமும் விசாரணை நிறைவுபெற்றது. வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரி நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு அரசுக்கு கடிதம் எழுதினார்.
அதில், இறுதிக்கட்ட அறிக்கையைத் தயார் செய்ய வேண்டியிருப்பதால் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இதனால், அறிக்கை சமர்ப்பிக்க 10 நாட்கள் அவகாசம் தேவை என்று கேட்டனர். இந்நிலையில், 10 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க உயர்கல்வித்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…