ஐகோர்ட்டில் இனி காணொலியில் மட்டுமே வழக்கு விசாரணை.!
ஊரடங்கு நிறைவடையும் வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலியில் மட்டுமே வழக்கு விசாரணை நடத்த முடிவு.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமலில் இருக்கும் ஊரடங்கு முடியும் வரை இனி காணொலி மூலம் மட்டுமே அவசர வழக்கு விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மே 3 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மே 3 வரை அவரச வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும். அதுவும், நீதிபதிகள் அனுமதியுடன் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் நேற்று உயர்நீதிமன்றம் வெளியிட அறிவிப்பில், மே மாத உயர்நீதிமன்ற விடுமுறை ஒத்திவைக்கப்படுகிறது. இதையடுத்து கீழமை நீதிமன்றங்களில் விடுமுறை நிறுத்திவைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு வழக்கறிஞர் அலுவலர் உறுதியாளர்கள் ஒருவருக்கும், உயர்நீதிமன்றம் வளாகத்தில் உள்ள எஸ்ஐ ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், நேற்று மாலை முதல் இன்று மதியம் வரை உயர்நீதிமன்றம் வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் மே 3 ஆம் தேதி வரை நீதிமன்றம் பணிகள் திறக்கப்படாது என்றும் வழக்கு விசாரணை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெறும் என்று தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.