சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு!!உயர்நீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணை!!
சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 25-ம் தேதி கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி என்ற யானையை டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால்,கடந்த சில நாள்களாக சின்னத்தம்பி யானை தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி சுற்றி வருகிறது.
இதற்கு சின்னத்தம்பி என்ற யானையை கும்கியாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில் சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார்.அருண் பிரசாத் முறையீடு குறித்து பிற்பகலில் விசாரிக்கின்றனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள்.