சூரப்பா மீதான விசாரணை – மேலும் 3 மாதம் அவகாசம் கேட்பு
அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு நீதிபதி கலையரசன் கடிதம் எழுதியுள்ளர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன.அவர் மீது இது குறித்து புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது.எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு .மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.
சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்ற நிலையில் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த குழுவின் அனுமதி இந்த மாதத்துடன் முடிய உள்ளதாக கூறப்படுகிறது.ஆகவே விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு தமிழக அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கடிதம் எழுதியுள்ளார்.