கோவையில் பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் 4 பலி….!!!
கோவையில் பன்றி காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு மூதாட்டி பலியாகியுள்ளார்.
தமிழகமெங்கும் காய்ச்சல்கள் பரவி வருகிற நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு மூதாட்டி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.