புதுமைப்பெண் திட்டத்தின் 2-ஆம் கட்டம், முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்.!

Default Image

புதுமைப்பெண் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல்வர் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.

அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும், இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் கிட்டத்தட்ட 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் முதன்முறையாக தொடங்கிவைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்