தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டம்..!
தமிழக அரசு தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி, அதனை கண்டித்து, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன், பொது மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் இந்து தேசிய கட்சியினர் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, தமிழக அரசு தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக கூறி, அதனை கண்டித்து, பொது மக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தில் இந்து தேசிய கட்சியினர் ஈடுபட்டனர்.
தமிழகத்தை ஆளுகின்ற திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக நகைக்கடன் ரத்து, கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, மகளிர் சுய உதவி குழு கடன் ரத்து, எரிவாயு உருளைக்கு 100 ரூபாய் மானியம், முதியோர் உதவித்தொகை 1500 ஆக உயர்த்தப்படும், புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும், மாதம் ஒருமுறை மின் கட்டணம் எடுக்கப்படும், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி தற்போது வரை அதனை நிறைவேற்றாமல் இருக்கும் திமுக அரசை கண்டித்தும், அதனை சமூகத்திற்கு தெரியப்படும் விதமாக பொதுமக்களுக்கு அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தை , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு இந்து தேசிய கட்சி நிறுவனத்தலைவர் நெல்லை மணி தலைமையில் அக்கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்தனர்.